Pages

Jan 19, 2013

வாழும் காலம்


நாம் வாழும் காலம் எவ்வளவு தெரியுமா?....

        ஜென் துறவி தன் சீடர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில், அவர்களிடம் "ஒருவருடைய நல்ல வாழ்க்கையின் ஆயுட்காலம் என்ன?" என்று கேட்டார். அதற்கு சீடர்களுள் ஒருவன் "வேறு எத்தனை... நூறு வயது தான்" என்று கூறினான். குருவோ, "இல்லை" என்றார். "அப்படியெனில், 90 வயது" என்று மற்றவன் கூறினான். 

அதற்கும் "இல்லை" என்று குரு கூறினார். அப்படியே சீடர்கள், 80? 70? என்று சொல்ல, அதற்கும் மறுத்தார். பின் அவர்கள் பொறுமையிழந்து "வேறு என்னவென்று நீங்களே சொல்லுங்கள்" என்று கூறினர். அதற்கு குரு "ஒரு வினாடி தான்" என்று கூறினார். "அது எப்படி ஒரு வினாடியில் நல்ல வாழ்க்கையை வாழ்ந்ததாக சொல்ல முடியும்?" என்று அனைவரும் கேட்டனர். 

அதற்கு குரு "நல்ல வாழ்க்கை என்பது ஒரு வினாடியில் தான் தெரியும். எப்படியெனில் ஒவ்வொரு வினாடியையும், வாழ்க்கையின் தொடக்கமாக நினைக்க வேண்டும். மேலும் அதையே முடிவு என்றும் நினைக்க வேண்டும். அதிலும் அந்த வினாடியில் எந்த ஒரு பழையதையோ அல்லது வருங்காலத்தையோ நினைத்து வாழக்கூடாது. ஒரு வினாடி பிறக்கிறதென்றால், அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும். அது தான் உண்மையான நல்ல வாழ்க்கை" என்று சீடர்களுக்கு சொல்லி, உண்மையான வாழ்க்கையின் தத்துவத்தைப் புரிய வைத்தார். 

இனையத்தளம் ஒன்றில் படித்த ஜென் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்...
>>>>>>>>>>0<<<<<<<<<<

வாழும் காலமதில் இணை பிரியாமல் திருமண பந்தத்தில் இணைந்த ஒரு ஜோடிக்கு செய்த க்விலிங் வாழ்த்து மடல்இப்போதாயினும் சொல்....

                 ஓராயிரம் கவிதை சொல்லுகிறாயே வாயால் இல்லையடி 
                 பா ஆயிரம் படிக்கத் தூண்டும் உன் கண்களால்
                 மின்னலடித்துக் கண்கள் இருண்டதடி நிலை தடுமாறுகிறேன்
                 ஓ நிலவின் வெண்மையென நீ சிந்திய புன்னகையாலோ
                 
                 இருளினில் அது என்ன செந்நிறத்தில் மின்னுகிறது
                 உன் கூந்தலில் இருக்கும் ஒற்றை ரோஜாவோ
                 எத்தனை பேர் என்னருகில் நின்றாலும் சட்டென ஏதோ 
                 என் காதுகளுக்கு மட்டும் கேட்கிறதே அது உன் 
                                                                                                  - வளையோசையோ
                 
                 எத்தனை வித்தைகள் செய்தென்னை மயக்குகின்றாய்
                 நித்திரை போச்சுதடி நினைவெல்லாம் நீயே ஆனாய் 
                 சித்திரமே செந்தேனே என் சித்தமெல்லாம் நீதானடி
                 இப்போதாயினும் சொல் உன் மனத்திலும் நானா...
--__--__--__--__--


அருள்தாராய்...

                                      இறைவா உன்னிடம்  கேட்கின்றேன்
                                      எம் இனம் வாழ உன்தன்  அருள்தாராய்
                                      குறைவாய் எமதன்பு என்றிடாமல்
                                      நிறைவாய் வாழ வரம்தாராய்...

இளமதி   


மேலே உள்ள மயில் இறகு க்விலிங் கைவேலையாக எத்தனையோபேர் இணையத் தளங்களில் விதவிதமாகச் செய்திருக்கிறார்கள். 
அவற்றில் சிலவற்றைப் பார்த்து நானும் செய்துள்ளேன்...
------------------------------------------------

என்னைக் கவர்ந்த பாடலில்..:
 பாடகர் அவரின் குரல், இசை, கவிதை அத்தனையும் இணைந்த நல்ல காட்சியுடனான அருமையான பாடல்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது....பகிர்ந்துகொள்ள விரும்பியது... 
எனக்குப் பிடித்த வரிகளை கூகிளாரிடம் பெற்ற படத்தில் இணைத்துள்ளேன். (நன்றி கூகிளாரே..:).


+++++++++++++++++++

குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை ”கிளிக்” பண்ணவும். ...மிக்க நன்றி..:)

Jan 13, 2013

தைத் திருநாள்

வாழ்த்துக்கள்!

அன்பு நண்பர்களே உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
 என் மனமார்ந்த தித்திக்கும் 
தைப்பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்!!! 
_()_

+++++++++++


பொங்க வேண்டும்...
-----------
                         பொங்க வேண்டும் வாழ்வில் இன்பம்
                         அகல வேண்டும் எங்கள் துன்பம்
                         பெருக வேண்டும் மனதில் மகிழ்வு
                         சிறக்க வேண்டும் யாவர்க்கும் நல்வாழ்வு! 

தை மகளும் வந்தாச்சு
~~~~~~~~~
                          தை மகளும் வந்தாச்சு
                          தமிழர் உள்ளம் மகிழ்வாச்சு
                          தன்னலமில்லா உழவர் உம்மால்
                         தரணியில் பஞ்சம் போகலாச்சு.

                         ஏர் பிடித்த உங்களினால்
                         பார் இன்று வாழுதையா
                         பேர் புகழும் உங்களுக்கே
                         பெருமிதம் கொள்ள வேண்டுமையா.

                         தைத்திருநாளில் எல்லோர்க்கும்
                         நல்வாழ்வுடன் புகழ் பெருமை
                         நலம் பல கிடைத்திட இறைவா 
                         உன்னருள் வேண்டி வாழ்த்துகிறேன் நான்...
அன்புடன்
இளமதி
                         
                                                                            


************

படித்ததில் பிடித்தது....பகிர்ந்துகொள்ள விரும்பியது... 


குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலைப்பில் ஒருமுறை ”கிளிக்” பண்ணவும். ...மிக்க நன்றி..:)

Jan 8, 2013

நட்பு


நட்புக்களே நலமோ?......

என்னவோ கனநாள் காணாதமாதிரி ஓர் உணர்வு அதுதான் கேட்டேன்..ஜேர்மனி காலநிலை இம்முறை ஸ்நோ வீழ்ச்சி நான் இருக்கும் இடத்தில் குறைவென்றாலும் குளிருக்கு பஞ்சமில்லை...:) 

மாலையில் 4 மணி 4.30 மணிக்கே இருட்டத் தொடங்கீடும். அடுத்தநாள் விடிஞ்சு 8.00 மணிவரை இருள் சூழ்ந்தே இருக்கும்....மனசும் சூரிய வெளிச்சம் இல்லாதமையாலும் அதிக நேர இருள் சூழ்ந்திருப்பதாலும் உற்சாகமில்லாமல் சோர்ந்து போய்விடுகிறது..


இதோடு நட்புகளை அதிகம் காணக்கிடைக்காமல் போகும்போது மனதில் வெறுமை, சலிப்பு இப்படி ஆக்கிரமிக்கப் பார்க்குது....ஆகவே ஃப்ரண்ஸ்... வாங்கோ சுகமா இருக்கிறீங்களோ? வேறை என்ன புதினங்கள்... புது வருஷ விஷேசங்கள்... சொல்லுங்கோ. கதைப்பம்... 


நானும் செய்த க்விலிங் கார்ட்டையும், கவிதை (எண்டு சொன்னா அடிக்கவருவீங்க...:) )  என  என் மனசில தோன்றினதை எழுதினதையும் பாருங்கோ....:))
*********************

நீங்கா நட்பு


                                      சூரியன் போல நிறைவான ஒளியை
                                      மாறாமல் தருவது நட்பு…

                                      ஓயாமல் கரை மோதும் கடலலை போல
                                      கணம் தோறும் நீங்காமல் தேடுவதும் நட்பு..

                                      அநீதிதனை பொசுக்கும் அக்கினி பிழம்பாக
                                      என்றென்றும் துனைவரும் அனலாயுதம் நட்பு…

                                      எதையும் தாங்கும் பொறுமைக்கு நிலமாம்
                                      எனக்கும் எப்பொழுதும் எனைத் தாங்குவதும்
                                      என் அருமை நட்புகளே…

அன்பான கவிஞர்களே..... என்னை அடிக்கவராதேங்கோ...:) எனக்கும் கவிதை மாதிரி எழுத சரியான விருப்பம். ஏதோ தத்துப்பித்தென்று கொஞ்சம் பிதற்றினதை மன்னிச்சு சரி பிழைகளை சொல்லுங்கோ...திருத்தி இன்னும் நல்லா எழுத ஆசை இருக்கு...கொஞ்சம் கொஞ்சமா நானும் கவிஞி...:) ஆகவேணமெல்லோ ....:))) உங்களின் பொறுமையை சோதிச்சிட்டன் போல.....:))) மன்னிச்சுக்கொள்ளுங்கோ....நட்புக்கு மிக்க நன்றி...:)

>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<


என்னைக் கவர்ந்தது: நட்பென்றால் என்னவென்று கூறும் கருத்துச் செறிந்த அருமையான பாடல்.  பாடகர்களின் குரலும்.காட்சியமைப்பும் மிக மிக அருமையாக என்னையும் அந்த நினைவலைகளுக்குள் இழுத்துச்செல்கிறது. கல்லூரி வாழ்க்கையையும் நண்பர்களையும் மறக்க முடியுமா...மறக்கக்கூடியதா....... ================

படித்ததில் பிடித்தது....பகிர்ந்துகொள்ள விரும்பியது... 
எனக்குப் பிடித்த வரிகளை கூகிளாரிடம் பெற்ற படத்தில் இணைத்துள்ளேன்.
(நன்றி கூகிளாரே..:).

~~~~~~~~~~~~~~~~~~~~~

குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை ”கிளிக்” பண்ணவும். ...மிக்க நன்றி..:)