Pages

Mar 28, 2013

தூது செல்லாயோ........

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ஹைஷ்!!!

இன்று பிறந்தநாள் காணும் ஹைஷ் என்னும் எங்கள் அன்புச் சகோதரரை நீண்ட ஆயுள் ஆரோக்கியமுடன் அனைத்து நலன்களும் கிடைக்கப்பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல 
இறை அருளை வேண்டி வாழ்த்துகிறோம்!!!இந்த அன்னத்தை எமது அன்புக்குரிய சகோதரர் ஹைஷ் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவருக்கு எங்களின் அன்பினையும் வாழ்த்தினையும் தெரிவிக்க தூது அனுப்புகின்றேன்......

 இந்தக் க்விலிங்க் அன்னத்தினை என் அன்புத்தோழி அஞ்சுவின் http://kaagidhapookal.blogspot.de/2013/02/blog-post.html வலைப்பூவில் இருந்த அன்னத்தைப் பார்த்துச் செய்தேன். மிக்க நன்றி அஞ்சு!!!.
(அஞ்சு என் க்விலிங் கைவேலை மானசீக குரு ஆவார். இப்படித் தன்னைச்  சொன்னால் 
தனக்குப் பிடிக்காதென்றுவிட்டார்... ) 
∞∞∞∞∞∞∞∞∞அன்பு உறவுகள் அனைவருக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!
☺☺☺☺☺☺☺☺☺


எம்முயிர்காக்கத் தூது செல்லாயோ...
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣


முன்பொரு காலத்திலே
நள தமயந்திக்கு நீதானோ
தூதுசென்றாய் அன்னமே
இன்னல்படும் தமிழர் ஈழத்திலே
பாவிகளால் பலியாவதைக்
கூற இப்போதுதூது செல்லாயோ

தென்னவர் தலைவர்க்கும்
சொல்லிய யாவும்
காற்றிலே போதன்னமே
எங்களின் சோதரர் கண்டிடும்
துன்பத்தை யாரும் சிந்தயில்
கொண்டதாய் காணவில்லையே

உன்னதமாய் உன்பங்கு
சங்ககாலத்தில் நிகழ்ந்தது
உண்மையென்றால் அன்னமே
இன்னமும் நம்முயிர் ஈழத்திலே
இழந்திடும் முன்னமே விரைந்து
நீ  தூது செல்லாயோ...
₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪

அன்பு நட்புகளே.....

     வலைப்பூப் பதிவர் சகோதரர் வெங்கட் நாகராஜ்  http://venkatnagaraj.blogspot.com/  தம் வலைப்பூவில் மேற்படி உள்ள படத்தைக்கொடுத்து அதற்கு கவிதை, கதை எழுத ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கவிதை எழுதும் ஆர்வம் என்னை இதற்கும் எழுதத் தூண்டிட நானும் என் சிற்றறிவுக்கெட்டியவரை ஏதோ கிறுக்கலாக எழுதியுள்ளேன். பிழைபொறுத்து ஏற்றுக்கொள்ளுங்கள். வித்தியாசமான முறையில் இதை அறிவித்த சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி. 

சகோதரரே! உங்களின் இவ் அரியபணி சிறக்க என் நல்வாழ்த்துக்கள்!!!
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினைப் பதிவு செய்யத் தலையங்கத்தில் ஒருமுறை ”அழுத்துங்கள்” ...மிக்க நன்றி..:)

Mar 23, 2013

உணர்வோடு.....


மனதில் நிலைக்கும் மழலையின் காட்சி
மடிந்திட்டானோ மனமொப்பவில்லை…  ஐயோ!
பேடிகளாய்ப்  பிறந்தநாட்டைவிட்டு வந்து
பேர்சொல்லவும் பிள்ளையில்லாமல் போனதங்கே...

கதிகலங்கி கருவும்கலங்கி கண்ணீர்சொரிந்து

கவலைமட்டுமே அங்கு மிகுந்ததோ எம்மிடம்
உயிர்காக்க ஓடிவந்தோம் தஞ்சமென இங்கு நம்
உணர்வுகளைக் காத்திட்டோமா இல்லையே...

ஊமைகளாய்  என்பிள்ளைக்கொன்றுமில்லை என்று

ஊரூராய் உலாத்துகின்றோம் வெட்கம் வேதனை.....
என்று தணியும் எங்கள் தமிழரின் தாகம்
என்றுமடியும் எங்கள் அடிமையெனும் ஓலம்….
ҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩ


அன்பினாலே உண்டாகும் நட்புவலை
அறிந்திடாமல் இருப்பதுவோ நாமிதனை...

பண்பினாலே வென்றிடலாம் பகையதனை
பழுதிலாத மனம்வேண்டும் பாரினிலே....

வாய்மையொடு வாழ்ந்திடவும்வேண்டுமன்றோ
மனத்தூய்மையுடன்  துயரகற்றித் துணிந்துநிற்போம்...

தமிழ்வாழ்ந்திடவே நாமெல்லாம் உலகினினிலே
தந்திடுவோம் எழுத்தினிலும் நம்உணர்வுகளை....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


புயலோ மழையோ எதுவந்தபோதும்
விளைவை நொந்து வீணாகிப்போகாமல்
துணிவுதான் எமக்குத் துணையெனப் பற்றிடு 
வினைக்கு அஞ்சியே வீழ்ந்து விடாதே...

==========00000==========

குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினைப் பதிவு செய்யத் தலையங்கத்தில் ஒருமுறை ”அழுத்துங்கள்” ...மிக்க நன்றி..:)

Mar 16, 2013

கதவு திறந்தே...

வசந்தம்வரக் கதவு திறந்தே...


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~மனக்கதவு திறந்தே...

                                  மனதின் கதவொன்றைத் தாள் திறந்தே
                                  மௌனம் வெளியேதான் வரத்துடித்தே
                                  இமைகள் கண்களைத் தழுவ மறந்தே
                                  இருக்கின்ற நிலைதனைச் சொல்லிவிடவா

                                  உறவே சிறையாகி என்றென்றுமே என்
                                  உணர்வுகள் தனைக்கொன்று குவிக்கின்றதே
                                  விழிநீர் தினந்தோறும் வலியோடுதிர்த்தே
                                  விழுந்தேன் வெங்காற்று வெட்டைதனிலே

                                  நினைவே  நீயெனக்குப் பகைதானா
                                  நிலவும் சுடுதே இது உண்மைதானா
                                  வருவேன் விரைந்தே உன்னிடம் நானே
                                  வனமே நீபோய்த்தான் ஒளிந்திருந்தாலும்

                                  உணர்வேயுன் உறவினில் தொடங்கியவாழ்வே
                                  உலர்ந்தாலும் என்னுயிர் உன்னோடுதானே
                                  கலந்தே இருப்பேன் உன்னோடு  நானே
                                  கணமே பிரியேன் கடவுள் கைகொடுப்பானே...

                                                                                                                       இளமதி
***************************


#################

என்னைக் கவர்ந்த பாடல்: சின்னக்குயில் சித்ராவின் அதி உச்சஸ்தாயியில் பாடும் மென்மையான மனதை வருடும் பாடல். ந.முத்துக்குமார் அவர்களின் கவிதை வரிகள் அப்படியே மனதை அள்ளிக்கொண்டு போகிறது. G.V. பிரகாஷின் இசையும் சொல்ல வார்த்தையே இல்லை. 
(சித்ரா பாடிய பாடலை ஒளிப்பதிவாகத் தேடிக் கிடைக்காதமையால் 
யூ டியூப்பில் இப்பாடலுக்கு வேறு காட்சிப்பதிவு கலந்து வெளியிடப்பட்டதை இங்கு தந்திருக்கிறேன்.)

~~~~~~~~~~~~~~~~~~~~~~


<<<<<<>>>>>
குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை ”கிளிக்” பண்ணவும். ...மிக்க நன்றி..:)