Pages

Apr 29, 2013

வருத்தும்வினை....


 கோட்டுச் சித்திரத்தில் செய்த க்விலிங் கைவேலையில்... 
**********


                                              வருத்தும் ஊழ்வினைதான்
                                                              ****************

                           காலங்கைகாட்டிக் கனிவோடு களிப்பு நல்கி
                           கோலம் மகிழ்வாகக் கொண்டே வாழுங்கால்
                           ஓலமிடவே விரைந்து ஓடிவந்த ஊழ்வினைதான்
                           ஞாலத்தில் இன்று நாதியற்று நலித்ததுவே...

                           மனதில் நெருடும் மயக்கம்மிகக் கொடுக்கும்
                           கனவில் நிலைக்கும் கண்ணீரும் சேர்ந்துதரும்
                           வினவும் வருத்தும் வேதனைமிகச் சேர்ந்துதரும்
                           தினமும் தேடும் தொலைந்துபோன வாழ்வதையே...
~~~~~~~~~~~~~~


தனிமை
>>><<<
சோடியிழந்து சொந்தமிழந்து
வாடிநிக்குறனே எனைவாரியணைச்ச
மன்னவன்தனியே போனதுதானெங்கே
கூடுமிழந்து கொப்புமிழந்து கூவியழுகிறனே
நாடிவந்த என்னருமை நாதனும்
போனதிசைதானெங்கே...
ஆடியது ஆட்டமெல்லாம் இங்கே
அடங்கித்தான் போயிடிச்சே
நான் நாளுமொரு திசையினிலே
வாடித்திரியுறனே கண்ணீரோடை
ஓடித்தான் திரியுறனே...

==========                                                  ஆதரவிலா நிலைதானோ
                                                            *****************  
                            மழைசூழ்ந்து மிரட்டும் மெல்லிருள் வேளை
                            இருள் தோன்றுமோ இன்னல்தான் வாழ்வோ
                            வருங்காலம் விடியலின் வரவது கூடுமோ
                            அருகாமை ஏதுமின்றி ஆதரவிலா நிலைதானோ...

                                                          ~~~~~~~~~~~~~~~~~~~_()_

பதிவோடு ஒரு அறிமுகம்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்ற 27.04.13ல் வலைச்சர பதிவரான சகோதரர் ராஜ் அவர்கள் 

// உங்கள் தளங்களில் ஒவ்வொறு பதிவுகளுக்கு கீழ் நீங்கள் ரசிக்கும் ஒரு புதிய பதிவர் பற்றிய அறிமுகத்தை கொடுங்கள். இதனால் அவர்களுக்கு வாசகர்கள் அதிகரிக்க சந்தர்ப்பம் இருக்கு.திறமைகள் அடையாளம் காணப்படவேண்டும்.

அன்புடன்
உங்கள்
நண்பன்
கே.எஸ்.ராஜ் //

 கூறியதற்கேதுவாக இம்முறை என் பதிவில் நானும் சகோதரர் சீராளன் என்பவரின் இரு வலைப்பூக்களை இங்கு அறிமுகம் செய்வதில் பெருமையடைகிறேன். சகோதரர் சீராளன் அழகிய காதல் கவிதைகள் மற்றும் நாடு, பொதுநலம், விழிப்புணர்வுக் கவிதைகளை எழுதுவதில் திறமையானவர். அவரின் தளத்திற்குச் சென்று அவரையும் ஊக்குவிக்கும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி!

Apr 22, 2013

இயற்கையோடு!...இயற்கையோடு இயல்பான சிறு பறவை ஒன்று 
க்விலிங் கைவேலையில்...:)
ooOoo
                                                     இயற்கை தரும் இளமை...
                                                                ▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫

                             வெற்றுமூங்கில் தந்திடுமே வேணு கானமாம்
                             காற்றிலாடும் பூக்கள்தரும் சுகந்த வாசமாம்
                             கருங்குயிலும் சேர்ந்துநல்ல கீதம்பாடுமாம்
                             காதல்கிளிகள் சோடியாகக் கதைகள் கூறுமாம்

                             தென்னங்கீற்று தீண்டும் தென்றல் மேனிவருடுமாம்

                             திரண்டமேகம் கறுக்கமயில் துள்ளி ஆடுமாம்
                             இயற்கைஅன்னை எமக்குத்தந்த இன்பம் கோடியாம்
                             இறுதிவரை அனுபவிக்க  இளமை ஓங்குமாம்...

        ⱷⱷⱷⱷⱷⱷⱷⱷⱷ
                                                                 அறுவடை
                                                                       ᶱᶱᶱᶱᶱᶱᶱ

                                             துளிர்க்கின்ற மரத்தினில்
                                             தலைகாட்டும் அரும்போடு
                                             மிளிர்ந்திடும் இலைகளும்
                                             மேலான பூக்களாக
                                             எனக்குள்ளே வேகமாய்
                                             எழுந்தாடும்  எண்ணங்கள்
                                             மனத்திற்குள் அறுவடையாய்
                                             மகிழ்வைத்தான் தாராதோ...
                                                                  ﻬﻬﻬﻬﻬﻬﻬﻬﻬﻬﻬﻬﻬ
                                                           மழை
                                                              ****
                                              பேரிகை முழங்க
                                              பெருவெளிச்சம்தான் ஒளிர
                                              மாமழை மன்னன் வந்து
                                              மாலையிட்டான்
                                              (பூ)மாதேவியையே...
                                                            ~~~~~~~

Apr 12, 2013

வசந்தமே வருக!...


க்விலிங் கைவேலையில் மலர்ந்த காகித மலர்களோடு
மனதில் நிறைந்த அன்பெனும் சுகந்த மணமுடன் 
வசந்தத்தை வரவேற்கின்றேன்! 
இத்தருணத்தில் சித்திரைப் புத்தாண்டும் மலர்கிறது.

வலையுலக அன்பு உறவுகள் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் 
என் இதயங்கனிந்த இனிய 
சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

மலரும் இப்புத்தாண்டு தாயகத்தில் அல்லலுறும் எம் இனத்திற்கு  
விடிவினைத்தந்து யாவரும் மனஅமைதியும் 
நிறைவுடனும் வாழ்ந்திட 
எல்லாம் வல்ல இறை அருளை வேண்டுகிறேன்!

வாழ்க வளமுடன்!
¤¤¤¤¤¤¤¤¤


வந்தது வசந்தம்...
ϫϫϫϫϫϫϫ

பனியியில் நனைந்த பூக்கள் சிரிக்கும்
பறவை மெல்ல சிறகினை விரிக்கும்
துயில்கின்ற வானம் கண்ணைத் திறக்கும்
துளிமழை அங்கே தூறித்தெறிக்கும்
இளமைமேலும் துள்ளிக் குதிக்கும்
இனிய கனவைக் கண்டு களிக்கும்
விடியல் கூட சேர்ந்து சிரிக்கும்
வீசும் தென்றல் தழுவிச் சிலிர்க்கும்
வசந்தம் வந்து பாட்டு இசைக்கும்
வாழ்வில் சுகமோ கொட்டிக்கிடக்கும்...

~~~~~~~~~~~~~~~
ஆனந்தம்தானோ...
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

அழகிய மரமே ஆனந்தம்தானோ
வந்தது வசந்தம் என்றுணர்ந்தாயோ
களிப்பினைக் காட்டத் துளிர்விடுகின்றாயோ
அதனுடன்கூட மொட்டவிழ்கின்றாயோ
முக்காடுபோட்டு முகம் மூடினாயோ
பூக்காடு நானென்று புளுகுகின்றாயோ...
ᴖᴗᴖᴗᴖᴗᴖᴗᴖ

₪₪₪₪₪₪₪₪

Apr 6, 2013

தமிழே!!! உயிரே!!!

இந்தக் க்விலிங் கைவேலையில் தமிழ் எழுத்துக்களுக்குப் பயன்படுத்திய வடிவமைப்பு வேறு பல கைதேர்ந்தவர்களின் வலைப்பூக்களில் பார்த்ததைச் செய்துள்ளேன். அவர்கள் ஆங்கில எழுத்துகளுக்கும் இப்படிச் செய்துள்ளனர்.
நானும் எம் தமிழ் எழுத்திற்குச் செய்து பார்த்ததை உங்களுடன் பகிர்வதில் மனம் மகிழ்கின்றேன். 
தமிழ் எழுத்துக்களில் வளைவுகள் அதிகம் என்பதால் செய்வதில் சற்று சிரமத்தை எதிர்கொண்டேன். 
எதிர்பார்த்த அழகு கிட்டவில்லை...:(.

 என் கைவேலைகள் பற்றிய உங்கள் கருத்துக்களும் என்னை ஊக்கப்படுத்தும். உங்கள் கருத்தினை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் மிக்க நன்றி!
♠♠♠♠♠♠♠♠♠♠


நானுணர்ந்த இன்பமிதை...
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

முக்கனியிலும் கண்டிராத இந்தச்சுவை
முழுவதுமாய் நானுணர்ந்த இன்பமிதை

வித்தெனவே ஆழ்மனதில் விழுந்தவிதை
விருட்சமாக வானளாவ வளர்ந்ததிதை

கட்டியெனை ஆட்கொண்ட காவியத்தை
காதலித்தேன் அறிவெனக்குத் தந்தகொடை

இப்புவியில் இல்லைநிகர் என்றிதனை
இயம்புகிறேன் இதனருமை அறிந்தவரை

சித்தமெலாம் சிலிர்க்கவைக்கும் சிறப்பிதனை
சிருங்காரம் சிதைந்திடாத சிற்பமிதை

சொத்தெனவே என்றனிடம் வந்ததிதைச்
சொல்லுகிறேன் தமிழ்மொழிதான் வேறு இலை...
ᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕ

தூய்மை
٭٭٭٭٭٭٭

நல்ல நினைவும்
நாடுகின்ற செயலும்
தொல்லகைள்  இன்றித்
தூய்மையைத் தருமே...
ҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩ